படிக்கட்டில் நின்றதை கண்டக்டர் கண்டித்ததால் ஆத்திரம் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த கல்லூரி மாணவர்கள்


படிக்கட்டில் நின்றதை கண்டக்டர் கண்டித்ததால் ஆத்திரம் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 17 Jan 2021 10:45 PM GMT (Updated: 2021-01-18T01:41:44+05:30)

படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை கண்டக்டர் கண்டித்ததால் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பூந்தமல்லி, 

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர் அந்த பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.

இதனால் அவர்கள் இருவரையும் கண்டித்த கண்டக்டர் ஜான்போஸ்கோ, படிக்கட்டில் நிற்காமல் இருவரையும் உள்ளே ஏறி வரும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த 2 மாணவர்களும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் பஸ், மதுரவாயல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்சில் இருந்து இறங்கிய 2 பேரும், கீழே கிடந்த கல்லால் பஸ்சின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பஸ் கண்டக்டர் ஜான்போஸ்கோ அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story