நாகை மாவட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


நாகை மாவட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 18 Jan 2021 4:10 AM GMT (Updated: 2021-01-18T09:40:49+05:30)

நாகை மாவட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது.

நாகூர், 

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி நாகை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் தங்ககதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பன்னீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாகூர் சம்பா தோட்டம் மீனவர் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாய்மேடு

வாய்மேடு கடைத்தெருவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், கட்சி நிர்வாகிகள் வீரமணி, ரமேஷ், பாலாஜி, அமுதன், அதியமான், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல தலைஞாயிறில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் சவுரிராஜன், நகர செயலாளர் பிச்சையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு அருகே மருதூர் தெற்கு ஊராட்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் மருதூர் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாலதி துரைராசு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இலக்குவன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார். இதில் கிளை செயலாளர்கள் கண்ணன், தருமலிங்கம், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சக்திதாசன் நன்றி கூறினார்.

வேதாரண்யம்

வேதாரண்யம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமருகல்

திருமருகல் மெயின் ரோடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மைதிலி ராஜேஷ்குமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராம்சந்தர், ஒன்றிய பேரவை தலைவர் ரகுபதி, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி செயலாளர் மரவாடி சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் அப்துல் பாசித் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரூர் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி இப்ராகிம், பேரூர் துணை செயலாளர் கோபி, பேரூர் அவைத்தலைவர் மன்சூர்ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story