காஞ்சீபுரம் அருகே ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி நிலம் மீட்பு
காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே உள்ள லாலா தோட்டம் பகுதியில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமாக 9 ஏக்கர் இடம் உள்ளது.
இதில் 1.46 ஏக்கர் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையினருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில் செயல் அலுவலர்களான என்.தியாகராஜன், ஆ.குமரன், மா.வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சென்றனர். அதன்பின்னர், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் வருவாய்த்துறையினரும் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 10 கோடி ஆகும். மேலும் இனி வரும் காலங்களில் யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வண்ணமாக அவ்விடத்தினை சுற்றிலும் 3அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story