சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு


வள்ளிநாயகம்
x
வள்ளிநாயகம்
தினத்தந்தி 18 Jan 2021 9:36 PM GMT (Updated: 18 Jan 2021 9:36 PM GMT)

ஊர் நாட்டாண்மை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக 5 பேைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொங்கல் விழாவில் தகராறு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குன்னக்குடி கிராமம் உள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியாக இந்த கிராமம் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், வள்ளிநாயகம் (வயது 52). விவசாயியான இவர் அந்த ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் வள்ளிநாயகம் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

புதருக்குள் உடல்
இதுதொடர்பாக ஒரு தரப்பினர் தாக்கியதால் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் வள்ளிநாயகம் புகார் செய்தார். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளிேய சென்ற வள்ளிநாயகம் மீண்டும் திரும்பவில்லை. இதுதொடர்பாகவும் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர்.

இதற்கிடையே, அவரது இருசக்கர வாகனம் குன்னக்குடி கிராமத்தில் மெயின் ரோட்டில் கிடந்தது. எனவே அங்கு அவரை தேடினர். அப்போது, அங்குள்ள முட்புதருக்குள் ரத்தக்காயங்களுடன் வள்ளிநாயகம் பிணமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து, வள்ளிநாயகத்தின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட எல்லைப்பகுதியாக இருப்பதால் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறம்பு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

5 பேருக்கு வலைவீச்சு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வள்ளிநாயகம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story