ரூ.73½ லட்சம் போதைப்பொருள், பணத்துடன் பெண் கைது


ரூ.73½ லட்சம் போதைப்பொருள், பணத்துடன் பெண் கைது
x
தினத்தந்தி 19 Jan 2021 6:20 AM IST (Updated: 19 Jan 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ரூ.73½ லட்சம போதைப்பொருள், பணத்துடன் பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை மாகிம் பகுதியை சேர்ந்தவர் நஸ்மா அகமது சேக்(வயது35). இவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாந்திரா பகுதியில் வைத்து போலீசார் அவரை பிடித்து சோதனை நடத்தினர்.

இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பாந்திரா குர்லா பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 கிலோ எடைகொண்ட சரஸ் என்ற போதைப்பொருள் சிக்கியது. இதன் சந்தை மதிப்பு ரூ.54 லட்சமாகும். மேலும் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

மொத்தம் ரூ.73 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள், ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நஸ்மா அகமது சேக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட அவரது கூட்டாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story