மழையால் அழுகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


மழையால் அழுகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2021 10:19 AM IST (Updated: 19 Jan 2021 10:19 AM IST)
t-max-icont-min-icon

மழையால் அழுகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி ் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 444 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

தொடர் மழையால் அழுகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி பேராலயம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த . பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.

கடலோர பிரதேச வேளாங்கண்ணி நகர செயலாளர் ஜான், கிளை செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலப்பிடாகை

அதேபோல மேலப்பிடாகையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். திருக்குவளையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

சிக்கல்

நாகை அருகே சிக்கலில் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியனர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாகை ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெற்பயிர்களை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 72 பேரை போலீசார் கைது செய்து. அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதே போல் கீழ்வேளூரில் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நாகை மாலி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ேதவூர்

தேவூர் கடைவீதியில் மாவட்ட குழு உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் சாலைமறியலில் ஈடு்பட்ட பெண்கள் உள்பட 62 பேரை போலிசார் கைது செய்தனர். சாட்டியக்குடி கடைத்தெருவில் மாவட்ட விவசாய சங்க தலைவர் அம்பிகாபதி தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 88 பேரை போலீசார் ைகது செய்தனர். நாகை மாவட்டத்தில் நடந்த சாலை மறியல்போராட்டத்தில் பெண்கள் உள்பட 444 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

திருமருகல்

திருமருகல் ஒன்றியம் நடுக்கடை கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். .விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, செயலாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..இதில் சியாத்தமங்கை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் ராமையன், சி.ஐ.டியூ..சி. ஒன்றிய செயலாளர் லெனின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய செயலாளர் பாலு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மாதர் சங்கம்

அதேபோல் இந்திய தேசிய மாதர் சங்கத்தின் சார்பில் திருமருகல் பஸ்நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க திருமருகல் ஒன்றிய செயலாளர் பரிதா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வாசுகி, மாவட்ட பொறுப்பாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தமிழரசன், மாசிலாமணி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, முருகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோவை. சுப்பிரமணியன், முத்துராமலிங்கம், வெற்றியழகன், பன்னீர்செல்வம், இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story