மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் + "||" + Struggle to petition the Dashildar to provide relief to the farmers

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
திருவாரூர்,

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோபிராஜ், சேகர், நிர்வாகிகள் சண்முகம், ஜோதிபாசு, ஹரிசுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை துணை தாசில்தார் சந்திரமோகனிடம் வழங்கினர்.

நீடாமங்கலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமையில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி துணை தாசில்தார் வசுமதியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர். இடும்பாவனம் கிராம நிர்வாக நிர்வாக அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீரசேகரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
2. வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேர் கைது
வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேர் கைது
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரால் பரபரப்பு
ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் மளமளவென ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரை போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.
5. கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.