கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்


கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 20 Jan 2021 11:38 PM GMT (Updated: 20 Jan 2021 11:38 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் கிரண்குராலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி,

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் போக்குவரத்து சிவகுமார், விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு

தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்தபேரணி துருகம் சாலை, நான்கு முனை சந்திப்பு, காந்திரோடு, மந்தைவெளி வழியாக சென்றது. இதில் பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 617 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 194 பேர் பலியாகி உள்ளனர். 870 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.

Next Story