வருகிற 25-ந்தேதி கரூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்; கே.எஸ். அழகிரி


காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
x
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
தினத்தந்தி 21 Jan 2021 3:48 AM GMT (Updated: 21 Jan 2021 3:48 AM GMT)

கரூர் மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார் என கே.எஸ். அழகிரி கூறினார்.

ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

கரூரில் நேற்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 25-ந்தேதி எங்களுடைய இளம் தலைவர் ராகுல்காந்தி கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது அணி மாபெரும் வெற்றி பெறுவதற்காக முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் அவர் பயணம் செய்கிறார். அந்த பயணத்தின் இறுதிநாள் அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகிறார்.

இந்த சுற்றுபயணத்தில் மிக முக்கியமாக விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்காக, விவசாய மக்களோடு அவர் கலந்துரையாடல் செய்கிறார். நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சினை இருக்கிறபோது, குறிப்பாக பா.ஜ.க.வின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டு எழுகிறபோது அதை மையப்படுத்தி அவர்களுக்கு பெரிய ஆறுதல் அளிப்பதற்காக கரூரில் நடைபெறுகிற விவசாயிகளுடைய எழுச்சி உரையாற்றலில் அவர் கலந்து கொள்கிறார்.

விவசாயிகள் பிரச்சினை
சிறுபான்மை மக்களுக்கான நம்பிக்கையை ஊட்டுவதற்கான நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பணி செய்து வருகிறார்கள். அதனை பார்வையிடுவதற்காக நாங்கள் வந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏற்பாடுகள் பிரமாதமாக இருக்கின்றன. குறிப்பாக விவசாயிகளுடைய பிரச்சினை குறித்து பிரசாரம் செய்ய உள்ளார். விவசாயிகளுக்கு இருக்கிற பிரச்சினைகள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மிக அதிகமாக உயர்ந்து உள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள்
அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி பொது வினியோக முறைக்கும், தானியங்களின் அடிப்படை விலைக்கும் மிக உயர்ந்த இடத்தை கொடுத்திருப்பது காங்கிரஸ் கட்சி தான். எனவே பொது வினியோக முறையும் தானியங்களுடைய கொள்முதல் விலை இரண்டையும் அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். அதனை காற்றில் விட்டு விட கூடாது. ஆனால் இந்த புதிய வேளாண் சட்டங்கள் அதற்கு எதிராக இருக்கின்றன.

எனவே அந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கரூரில் அதைதான் ராகுல்காந்தி முன்னிலைப்படுத்தி பேச இருக்கிறார். பி.எஸ்.என்.எல். இந்தியாவில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக இருந்தது. ஆனால் 4ஜி அலைக்கற்றை வரிசையை பி.எஸ்.என்.எல்-க்கு கொடுக்காமல், தனியாருக்கு பிரதமர் மோடி கொடுத்தார்.

Next Story