படப்பை அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை


மோனிஷா
x
மோனிஷா
தினத்தந்தி 22 Jan 2021 4:53 AM IST (Updated: 22 Jan 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் குடித்தார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வெங்காடு ஊராட்சியில் உள்ள மேட்டு கருணாகரசேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவருடைய மனைவி மோனிஷா (19) நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் வாந்தி எடுத்துள்ளார்.

என்ன என்று கணவர் கேட்டதற்கு வயிற்று வலியின் காரணமாக பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

சாவு
அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மோனிஷாவை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் மோனிஷாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story