கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்


கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2021 1:18 AM IST (Updated: 23 Jan 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் மற்றும் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கியது.

கடையநல்லூர்,

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் மற்றும் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கியது. விழா நாட்களில் இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

விழாவின் 9-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1.30 மணிக்கு பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story