மாவட்ட செய்திகள்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் + "||" + BJP protests in Madunga condemning the corporation administration

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
மும்பை,

சயான் கோலிவாடா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சியினர் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என குற்றம்சாட்டி நேற்று மாட்டுங்காவில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் முன் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மும்பை பா.ஜனதா துணை தலைவா் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. மும்பை தலைவர் மங்கல் பிரதாப் லோதா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட கட்சியினர், பொது மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சயான் கோலிவாடா பகுதியில் குடிநீர் பிரச்சினை, சாக்கடை கழிவுநீர், குப்பைகளை முறையாக அகற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

இந்தநிலையில் போராட்டம் குறித்து அறிந்து மாநகராட்சி துணை கமிஷனர் மாட்டுங்கா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் விலை உயர்வு: பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.
2. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
3. வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேர் கைது
வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேர் கைது
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரால் பரபரப்பு
ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் மளமளவென ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரை போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.