பாகூர் மூலநாதர் கோவிலில் சசிகலா குணமடைய வேண்டி சிறப்பு யாகம்


பாகூர் மூலநாதர் கோவிலில் சசிகலா குணமடைய வேண்டி சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 23 Jan 2021 5:45 AM IST (Updated: 23 Jan 2021 5:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண குணம் அடைய வேண்டி பாகூர் மூலநாதர் கோவிலில் அ.ம.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நடந்தது.

பாகூர்,

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண குணம் அடைய வேண்டி பாகூர் மூலநாதர் கோவிலில் அ.ம.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. மாநில அ.ம.மு.க. செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், இணைச் செயலாளர் விமலாஸ்ரீ, பொருளாளர் வீரப்பன், துணை செயலாளர் தமிழரசி, சேகர், பாகூர் பாவாடை, ராஜாராம், மணவழகன், நகர செயலாளர்கள் பாஸ்கர், ஜெயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைமைக் கழக பேச்சாளர் அருள்ராஜ், இளைஞரணி ஆறுமுகம், வர்த்தக அணி மோகன், மகளிரணி காமாட்சி, தகவல் தொழில்நுட்ப பிரிவு (பெண்கள்) பிரேமா, ஸ்ரீகுமார், வேல்விழி, தொகுதி செயலாளர்கள் ராஜாராம், காண்டீபன், குமரவேல், தனவேலு, சிராஜ், வாழுமுனி, வேணுகோபால், சுந்தர், ஜாபர் அலி, ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சக்கரபாணி, இளவரசு, தெய்வநாயகம், வைத்தியநாதன், ஜாகீர் உசேன், சுப்புலட்சுமி மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story