கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Jan 2021 6:24 AM IST (Updated: 23 Jan 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கருங்கல்,

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்து வந்தார்.

ரூ.2 கோடியில் சீரமைப்பு

அவரது கோரிக்கையை ஏற்று கருங்கல்- குளச்சல் சாலையை சீரமைக்க ரூ.2 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், செயலாளர் சுனில், கருங்கல் நகர தலைவர் குமரேசன், கருங்கல் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், குமாரவேல் மணி மற்றும் ஜாண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story