மாவட்ட செய்திகள்

நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று + "||" + Female kills corona in Nellai 15 infected in Tenkasi-Thoothukudi

நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று

நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி 59 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 213 பேர் பலியாகி உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 389 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 8 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 47 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 158 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 240 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 45 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
4. ஓமனில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.