காஞ்சீபுரம் அருகே சாலையோரம் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
காஞ்சீபுரம் அருகே ராஜகுளம் என்ற பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன.
இதில் 2 லாரிகளும் ஒன்றோடு ஒன்று உரசியதால் 2 லாரிகளையும் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.இந்தநிலையில் அதில் ஒரு லாரியின் பேட்டரியில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென லாரி முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த காஞ்சீபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், லாரியில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் லாரியின் முன் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story