டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 8:42 AM IST (Updated: 24 Jan 2021 8:42 AM IST)
t-max-icont-min-icon

மத்தியஅரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை ரெயிலடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

மத்தியஅரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை ரெயிலடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் பேசினார். இதில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story