மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2021 8:55 AM IST (Updated: 24 Jan 2021 8:55 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1986-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. தொடக்கத்தில் நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நாளடைவில் நஷ்டத்தை சந்தித்தது. 2015-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

திறக்க கோரிக்கை

ஆனால் ஆலையை புனரமைக்க ரூ.100 கோடிக்கு மேல் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அந்த தொகை விடுவிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சர்க்கரை ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த வகையில் விவசாயிகளுக்கும் பல கோடி ரூபாய் நிலுவைத்தொகை தற்போது வரை கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி ரூ.56 கோடியை விடுவித்து உடனே சீரமைப்பு பணிகளை தொடங்கி மயிலாடுதுறை அருகே தலைஞாயிறில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி் மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுணவேந்தன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் காசிநாதன் மற்றும் பலர் இருந்தனர்.

Next Story