உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 25 Jan 2021 3:58 AM IST (Updated: 25 Jan 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

உடலும், உடலுக்கும் தொட்டால் மட்டுமே அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும் என மும்பை ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மும்பை,

நாக்பூரை சேர்ந்தவர் சதீஸ்(வயது39). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 12 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் சதீசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பா கனடிவாலா முன் நடந்தது. அப்போது நீதிபதி "குற்றவாளி சிறுமியின் ஆடைகளின் மீது உடலை தொட்டு தான் குற்றம் செய்து உள்ளார். உடலும், உடலும் தொட்டால் மட்டுமே அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும். எனவே குற்றவாளிக்கு சிறுமியை மானபங்கம் செய்ததாக மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் என கருத்து தெரிவித்தார்.

மேலும் நீதிபதி, சதீஸ் மீது பாலியல் வன்கொடுமை சட்டபிரிவின் கீழ் செசன்ஸ் கோர்ட்டால் வழங்கப்பட்ட 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையை ரத்து செய்தாா்.

அதே நேரத்தில் அவருக்கு பெண்ணை மானபங்கம் செய்ததாக தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதற்கு அதிகபட்சம் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story