சென்னை மாநகராட்சியில் 11-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி
இந்தியா முழுவதும் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாக்காளர் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் கோ.பிரகாஷ், ஒவ்வொரு வாக்காளரும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டைகளை வழங்கினார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ஓவியபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
Related Tags :
Next Story