சிமெண்டு குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி


சிமெண்டு குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 28 Jan 2021 10:21 AM IST (Updated: 28 Jan 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி அமுதா நகர் 3-வது தெருவில் சாலையின் குறுக்கே செல்லும் சிமெண்டு குழாய் உடைந்து காணப்படுகிறது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி அமுதா நகர் 3-வது தெருவில் சாலையின் குறுக்கே செல்லும் சிமெண்டு குழாய் உடைந்து காணப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும கழிவுநீர் சாலையின் இருபுறங்களிலும் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் குழாய் உடைந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு குழாயை சரி செயய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story