சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் ஊராட்சியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று பிச்சிவாக்கம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரி பேரம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
போலீசாரும், ஊராட்சி செயலாளரும் 2 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என வாக்குறுதி அளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர். 2 நாட்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லையெனில் மிக பெரிய போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story