அதிராம்பட்டினம் பகுதியில் வலையில் அதிகமாக சிக்கும் ‘சங்குமுட்கள்’ மீனவர்கள் அவதி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேற்று கடல் பகுதியில் ‘சங்குமுட்கள்’ அதிகமாக உள்ளது. சங்கு இனத்தை சேர்ந்த இந்த சங்கு முட்களை கடலுக்கு அடியில் அதிகளவில் காணலாம்.
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேற்று கடல் பகுதியில் ‘சங்குமுட்கள்’ அதிகமாக உள்ளது. சங்கு இனத்தை சேர்ந்த இந்த சங்கு முட்களை கடலுக்கு அடியில் அதிகளவில் காணலாம்.
கடல் அலையின் வேகம் காரணமாக இவை கடலுக்கு மேலே வரும்போது மீனவர்கள் வலையில் சிக்கி கொள்கின்றன. சிக்கிய சங்கு முட்களை எளிதில் அகற்றி விட முடியாது. சிரமப்பட்டு கவனத்துடன் அகற்ற வேண்டும். அப்படி அகற்றும்போது மீனவர்களின் கைகளை சங்கு முட்கள் காயப்படுத்தி விடுவதால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
சங்கு முட்களை கொண்டு எதற்கும் பயன் இல்லை என மீனவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ‘அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 3 கடல் பாகத்தில் இருந்து 5 கடல் பாகம் வரை சேறுநிறைந்த பகுதியில் சங்கு முட்கள் அதிகமாக தென்படுகின்றன.
சங்குமுள் அதிகமாக காணப்படும் பகுதி எங்களுக்கு தெரியும் என்றாலும், காற்று மற்றும் அலையின் தாக்கம் காரணமாக அவை இடம் பெயர்ந்து வலையில் சிக்கி கொள்கின்றன.
விஷத்தன்மை கொண்ட சங்குமுள் உடலில் குத்தினால் கடுமையான வலி ஏற்பட்டு புண்ணாகிவிடும்’ என்றனர்.
Related Tags :
Next Story