ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை துரத்திய காட்டு யானை;வேன் டிரைவர் காப்பாற்றினார்


ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை துரத்திய காட்டு யானை;வேன் டிரைவர் காப்பாற்றினார்
x
தினத்தந்தி 30 Jan 2021 4:35 AM IST (Updated: 30 Jan 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை காட்டு யானை துரத்தியது. அப்போது அவர்களை அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர் காப்பாற்றினார்.

ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை காட்டு யானை துரத்தியது. அப்போது அவர்களை அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர் காப்பாற்றினார்.

காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே காட்டு யானை ஒன்று நேற்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் 2 பேர் மேட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

துரத்தியது
காரப்பள்ளம் அருகே சென்றதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒற்றை யானையானது அவர்களை துரத்த தொடங்கியது. உடனே அவர்கள் யானையிடம் இருந்து தப்பிக்க மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டினர். எனினும் அவர்களை யானை துரத்தியயடி சென்றது. இதற்கிடையே அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை யாைன துரத்தியதை கண்டதும், அந்த சரக்கு வேனின் டிரைவர், தன்னுடைய வாகனத்தை யானையின் குறுக்கே நிறுத்தினார். இதனால் மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் உயிர் தப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் யானை சென்றது. இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story