அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பு
அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும், வாகன ஓட்டிகள் செல்போன் மற்றும் மது அருந்தி கொண்டு வாகனங்களை ஓட்ட கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முகமது ரபீக், உதவி பொறியாளர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story