போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற மருத்துவக்குழுவினரை சிறை பிடித்த கிராம மக்கள்


போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற மருத்துவக்குழுவினரை சிறை பிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 31 Jan 2021 5:52 AM GMT (Updated: 31 Jan 2021 5:54 AM GMT)

ஏமனூரில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற மருத்துவக்குழுவினரை சிறை பிடித்த கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரை நியமிக்க வலியுறுத்தல்

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம், நாகமரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு ஏமனூர், மேற்கு ஏமனூர், அருந்ததியர் நகர், ஆத்து மேட்டூர், தோழன் காட்டுவளவு, சிங்காபுரம், கொங்கரப்பட்டி, குளிப்பட்டி ஆகிய கிராமங்களில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 இந்தநிலையில் ஏரியூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சதீஷ் மற்றும் செவிலியர்கள் உள்பட மருத்துவ குழுவினர் ஏமனூரில் உள்ள குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக நேற்று சென்றனர். மருத்துவ குழுவினரிடம் ஏமனூர் பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் நியமிக்க வேண்டும். கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து ெகாடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறைபிடித்தனர். 

மேலும்  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை ஏற்க மாட்டோம் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார்  விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் டாக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினரை அவர்கள் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story