கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண வலியுறுத்தி நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணை தலைவர் பாலசுப்ரமணி, ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எல்.எப்., எம்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.