வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 31 Jan 2021 6:10 PM IST (Updated: 31 Jan 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்,

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வேலூர் உட்கோட்ட காவல்துறை மற்றும் வேலூர் நகர இருசக்கர வாகனங்கள் பழுதுபார்ப்போர் சங்கம் சார்பில் 'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் நேஷ்னல் சர்க்கிள், மக்கான் சர்க்கிள், அண்ணாசாலை, ஆரணி சாலை, தொரப்பாடி மத்திய ஜெயில் வழியாக வந்து வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. 

இதில், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்ப்போர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 'ஹெல்மெட்' அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Next Story