மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2021 6:19 PM GMT (Updated: 1 Feb 2021 6:27 AM GMT)

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் கருப்பண்ண பிள்ளைசந்து பகுதியை சேர்ந்த பீர்ஒலி மகன் இம்ரான் ஹாலித் (வயது 22). 

இவர் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இம்ரான் ஹாலித்தை போலீசார் கைது செய்தனர். 

Next Story