லாலாபேட்டை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் கொடூர கொலை


கதிர்வேல்
x
கதிர்வேல்
தினத்தந்தி 31 Jan 2021 8:12 PM GMT (Updated: 31 Jan 2021 8:19 PM GMT)

லாலாபேட்டை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை சந்தை மேல்புரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கதிர்வேல் (வயது 35). இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம், லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையம் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் கதிர்வேல் கழுத்தை அறுத்து, மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாதானபுரத்தை சேர்ந்த தர்மதுரை (27), பிள்ளபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:- 
கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கதிர்வேலுக்கும், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த தர்மதுரையின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மதுரைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வள்ளது. இதனால் இதனால் கணவருடன் கோபித்து கொண்டு தர்மதுரையின் மனைவி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தர்மதுரை தனது நண்பர் கிருஷ்ணனுடன் கதிர்வேலு வீட்டிற்குச் சென்று தனியாக பேசவேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், பிள்ளபாளையம் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் கதிர்வேலை அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. 
கொலை செய்யப்பட்ட கதிர்வேலுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளத்தொடர்பு தொடர்பாக வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story