மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 Feb 2021 2:16 AM GMT (Updated: 1 Feb 2021 2:19 AM GMT)

மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனையை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் குடும்ப தகராறில் செல்வி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதால், மனமுடைந்த சரவணன் விவசாய நிலத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story