எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி,
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியம் கருதியும் வழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை திருச்சி ஆர்.டி.ஓ. விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (சில்லறை விற்பனை) பாபு நாகேந்திரா, முதன்மை பகுதி மேலாளர் ராஜேஷ், மேலாளர் ஜெயலட்சுமி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகிப்பாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தென்னூர் சாஸ்திரி சாலை வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.
Related Tags :
Next Story