சைக்கிள் கடை குடோனில் தீ விபத்து


சைக்கிள் கடை குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 1 Feb 2021 11:42 AM IST (Updated: 1 Feb 2021 11:44 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே சைக்கிள் கடை குடோனில் தீ விபத்து

ஆலங்குடி,

ஆலங்குடி கலைஞர் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் சைக்கிள் கடை மற்றும் உதிரி பாகங்கள் உள்ள குடோன் உள்ளது. அக்கட்டிடத்தின் மாடியில் 2 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சைக்கிள் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதனைக்கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறைக்கும், மின்வாரியத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது ஏற்பட்ட புகை மூட்டத்தால் மேலே இருந்த குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1 More update

Next Story