கடல் நடுவே மணல் திட்டுக்கள்


கடல் நடுவே மணல் திட்டுக்கள்
x
தினத்தந்தி 1 Feb 2021 6:27 AM GMT (Updated: 1 Feb 2021 6:27 AM GMT)

ஏர்வாடி அருகே கடல் நடுவே மணல் திட்டுக்கள் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

ீழக்கரை,

ஏர்வாடி அருகே கடல் நடுவே மணல் திட்டுக்கள் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

மணல் திட்டுக்கள்

உலகிலேயே ராஜா அம்பட், இந்தோனேசியா, சாலமன் தீவுகள், பப்புவா நியு ஜெனியா, பிஜி தீவுகள் உள்ளிட்ட கடல் பகுதிகளில் உலகின் அரிய வகை கண்கவர் பவள பாறைகள் உள்ளன. அந்த வரிசையில் மன்னார் வளைகுடா பகுதி கணக்கில் கொள்ளப்பட்டு சர்வதேச அளவில் அரிய வகை பவள பாறைகள் அதிகளவில் இப்பகுதியில் உள்ளதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கடல் பகுதியில் இது போன்ற அரிய வகை பவள பாறை காட்சிகளை இங்கு மட்டுமே காண முடியும் என தெரிவிக்கின்றனர்.
ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் இருந்து முல்லைத்தீவு செல்லும் கடல் வழி நடுவே ஒரு எக்டர் பரப்பளவில் மணல்திட்டுக்கள் காணப்படுகின்றன.இதை தொடர்ந்து கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்பட்டு படகுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மீன்பிடி அனுமதி கிடையாது. இதனால் இப்பகுதியில் அதிக பவளப்பாறை, மூளைப்பாறை போன்ற பாறைகள் அதிகம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.இப்பகுதியில் படகு சவாரி செல்பவர்களை கடல் நடுவே உள்ள மணல் திட்டில் பாதுகாப்புடன் இறங்கி சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று மணல் திட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.

படகு சவாரி

இதுகுறித்து கோவையில் இருந்து சுற்றுலா வந்த முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது:-
இதுவரையிலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கண்ணாடி பொருத்திய படகில் சவாரி செய்தது கிடையாது.இதில் சென்றதும் கடலடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல்வாழ் அனைத்து உயிரினங்களையும் நேரடியாக காண முடிந்தது.வெளிநாட்டில் சுற்றுலாவில் சென்றபோது உள்ள அனுபவம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
 தற்போது 2 படகுகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story