புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 1 Feb 2021 4:36 PM GMT (Updated: 2021-02-01T22:08:46+05:30)

புதுவையில் 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில்  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு தொற்று உறுதியானது. அதேநேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 78 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 39 ஆயிரத்து 98 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 129 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 156 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 38 ஆயிரத்து 160 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை நகரம் தியாகராஜன் தெருவை சேர்ந்த 74 வயது மூதாட்டி, கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த 87 வயது முதியவர், தவளக்குப்பம் மணமேடு தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 

இவர்களை சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, புதுச்சேரியில் 532 பேரும், காரைக்காலில் 65 பேரும், ஏனாமில் 45 பேரும், மாகியில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். 

Next Story