காட்பாடி ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காட்பாடி ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 4:38 PM GMT (Updated: 2021-02-01T22:08:08+05:30)

தனியார் மயமாக்குவதை கண்டித்து காட்பாடி ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடி

காட்பாடி ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜான்சன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் பிரபு, கிரிஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மையமாக்கக்கூடாது. இதனால் ரெயில் பயணிகளுக்கு பயணக்கட்டணம், சிறப்பு ெரயில் கட்டணம் உயரும், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் ரத்து செய்யப்படும். எனவே ரெயில்வே துறை தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story