அரசு பஸ் மோதியதில் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம்


அரசு பஸ் மோதியதில் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Feb 2021 7:10 PM GMT (Updated: 2021-02-02T00:40:51+05:30)

அரசு பஸ் மோதியதில் சக்கரத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய வாலிபர் படுகாயம் அடைந்தாா்.

பெரம்பலூர்,
பெரம்பலூரில் இருந்து வேப்பூருக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை நேற்று டிரைவர் குரும்பலூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டினார். காலையில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த பஸ் பாலக்கரை ரவுண்டானா அருகே துறைமங்கலம் சாலைக்கு திரும்பியது. அப்போது முன்னால் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நடேசகுமார் (31) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில், மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய நடேசகுமார் சிறிது தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டதில் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் நடேசகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Next Story