அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி


அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 2 Feb 2021 12:29 AM GMT (Updated: 2021-02-02T05:59:28+05:30)

அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 50). அ.தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த இவர், நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த போலீசார் வசந்தாவை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 

விசாரணையில், வசந்தா வசித்து வரும் வீடு அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை காலி செய்யுமாறு வசந்தாவை வருவாய்த்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை காலி செய்ய அதிகாரிகள் கூறியதை கண்டித்து அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story