இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2021 4:13 PM GMT (Updated: 2 Feb 2021 4:13 PM GMT)

ரத்தினகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி இந்துமதி (வயது 23), தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  
இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் இன்று இந்துமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்தனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட இந்துமதிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story