பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் உரையில் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் உரையில் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2021 1:12 AM GMT (Updated: 2021-02-03T06:42:37+05:30)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் உரையில் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் உரையில் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தியில் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கிடையே ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதுகூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏழு மண்டலங்களாக பிரித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாக உள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையில் அதை செயல்படுத்துவோம் என மத்திய அரசு கூறி உள்ளது, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. முகமது நபியை விமர்சித்து பேசிய  பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 

தமிழக சட்டசபையில் கவர்னர் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் கவா்னர் அது குறித்து எதுவும் பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலை விட மனித நேய மக்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story