விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2021 2:23 AM GMT (Updated: 2021-02-03T07:57:01+05:30)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலை,

தமிழகத்தில் கடந்த சில மாதமாக பெய்த தொடர் மழையால் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், வாழை, கரும்பு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சமும், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முழுவதும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் கோவில் நிலங்களில் குத்தகைக்கு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். குளித்தலை தென்கரை வாய்க்காலில் கோடை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய வட்டப் பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story