கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து


கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 3 Feb 2021 3:22 AM GMT (Updated: 2021-02-03T08:54:55+05:30)

கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து.

திருப்பூர், 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு குளத்துப்பாளையத்தில் ஷாஜகான் என்பவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில்  கரும்புகை வெளியேறியது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேரமாகப் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் குடோனின் மற்ற பகுதியில் இருந்த கழிவுப் பஞ்சுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Next Story