தென்காசியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தென்காசியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 Feb 2021 3:34 AM IST (Updated: 4 Feb 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி, 

தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன் மகன் அப்துல் ரகுமான் என்ற ஜிலேபி (வயது 25). தென்காசி அருகே இலத்தூர் துரைச்சாமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (23). இவர்கள் 2 பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தென்காசி போலீஸ் நிலையத்தில் உள்ளன.

எனவே அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதம், தென்காசி கிளை சிறையில் இருந்த அப்துல் ரகுமான், கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story