தென்காசியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2021 4:47 AM IST (Updated: 5 Feb 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொது சுகாதாாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி, 

தென்காசி மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர்கள் மீது வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் ராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகுபதி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் கோவில்பிச்சை, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் திருமலை முருகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள். சங்க துணைத்தலைவர் கதிரவன் நன்றி கூறினார்.

Next Story