கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி,
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 48). இவர் கவரைப்பேட்டை அடுத்த அய்யர் கண்டிகை கிராமத்தில் உள்ள தனியார் குக்கர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். சவுந்தரபாண்டியன் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகையில் உள்ள ஜெயராம் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு கிறிஸ்டி (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து சவுந்தரபாண்டியன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கவரைப்பேட்டை பழைய போலீஸ் நிலைய கட்டிடம் எதிரே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
சாவு
இதில் தலை நசுங்கி சவுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story