விவசாயிகள் கண்டுனர் சுற்றுலா


விவசாயிகள் கண்டுனர் சுற்றுலா
x
தினத்தந்தி 7 Feb 2021 5:55 AM IST (Updated: 7 Feb 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கண்டுனர் சுற்றுலா சென்றனா்.

தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுனர் சுற்றுலா மீன்சுருட்டி அருகே உள்ள வேம்புகுடி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறையின் இளநிலை ஆய்வாளர் ஜோதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், இளம்புழு வளர்ப்பு, வளர்ந்த புழு வளர்ப்பு, கிருமி நீக்கம் செய்தல், புழுக்களுக்கு உணவளிக்கும் முறை, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு, பட்டுப்புழு அறுவடை மற்றும் பிரித்தல், விற்பனை குறித்து விளக்கி கூறி, மல்பெரி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிப்பதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும், மல்பெரி ரகம், நடவு செய்யும் முறை, ரசாயன உரம் இடுதல் மற்றும் நீர் மேலாண்மை குறித்தும் பேசினார். மேலும் மல்பெரி சாகுபடி செய்த வயல்வெளியை விவசாயிகள் பார்வையிட்டனர். முன்னதாக உதவி தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமி வரவேற்று அட்மா திட்டம் குறித்து கூறினார். தழுதாழைமேடு மற்றும் வேம்புகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story