வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் நேரு தலைமை தாங்கினார்.
26 பேர் கைது
இந்த போராட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் மீது அடக்குமுறையை நிறுத்தக்கோரியும், இணையதள சேவையை தொடர்ந்து வழங்கிட கோரியும், விவசாயிகளின் மீதும் தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் லிங்கநாதன், பெருமாள், சாரங்கன், முருகேசன், மூர்த்தி, டில்லிபாய், சசிகலா உள்ளிட்ட 26 பேரை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Related Tags :
Next Story