காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை
x
தினத்தந்தி 7 Feb 2021 10:16 AM IST (Updated: 7 Feb 2021 10:16 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக வயது வரம்பு தளர்த்துதல் கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக வயது வரம்பு தளர்த்துதல் கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 54 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டதில் 43 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 18 வயதுக்கு உட்பட்ட 43 மாற்றுத்திறனாளிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதில் ஒருவர் நிராகரிக்கப்பட்டு 42 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தனித்துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story