அம்மாபேட்டை அருகே அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேக விழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
அம்மாபேட்டை அருகே நடந்த அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே நடந்த அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்.
அகோர வீரபத்திரர்
அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பூசாரியூர் பகுதியில் புகழ் பெற்ற செம்முனீஸ்வர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதத்தில் 7 நாட்கள் விமர்சியாக நடைபெறும். இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.
செம்முனீஸ்வரர் கோவிலின் எதிரே பழமையான அகோர வீரபத்திரர் கோவிலும் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்ததால் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
காவிரி தீர்த்தம்
அதன்படி கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், பட்டத்து வீரபத்திரர், உத்தண்ட வீரபத்திரர், நாகினி அம்மன், பச்சையம்மன், பத்ரகாளியம்மன், பொன்னியம்மன் சாமி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த கடந்த 9-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, யாகசாலை வைத்து வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அகோர வீரபத்திரர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து சாமிகளுக்கும் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் அம்மாபேட்டையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டார்கள்.
அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story