சாராயம் பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது


சாராயம் பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2021 12:05 PM GMT (Updated: 12 Feb 2021 12:05 PM GMT)

திருவண்ணாமலையில் சாராயம் பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

சாராயம் பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் நல்லவன்பாளையம் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது விற்பனைக்காகவும், கடத்துவதற்காகவும் சாராயம் பதுக்கி வைத்திருந்த திருவண்ணாமலை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி (வயது 27), நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரிதா (34), தண்டராம்பட்டு தாலுகா தட்டரணை கிராமத்தை சேர்ந்த சண்முகம் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து 145 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story